Tamilnadu

ஆளுநரா? சபாநாயகரா? – எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம்?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்பிளவு காரணமாக சி.வி. சண்முகம் தரப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் அந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அவர் கூறினார். தற்போது சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி அணியில் 24 பேர் உள்ளனர். மொத்தம் 47 பேரில் 32 பேர் இருந்தால்தான் அந்த சட்டம் செயல்படும் என அவர் விளக்கினார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாகவே வேறு கட்சியில் இணைந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சிக்கலானது என்றும் கூறினார். அதிமுகவில் தொடர்ந்தபடியே மற்றொரு கட்சிக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே கட்சித் தாவல் சட்டம் பொருந்தும். தகுதி நீக்கம் தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் முதலில் சபாநாயகருக்கே உள்ளது. அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநரை அணுகலாம். அதற்குப் பிறகும் தீர்வு இல்லையெனில் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு இருப்பதாக கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *