ராமர் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இன்று வருகை தந்தார்.
அவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தயார் சன்னதி தாயாரை வழிபட்டார்.
அதனை தொடர்ந்து கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது துணைவியாகும் ஈடுபட்டனர்.
ஆளுநரின் வருகையையொட்டி ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும்.
அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளன. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது என்று பேசினார்
தொடர்ந்து பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ராமர் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
இதயும் படியுங்கள் : https://itamiltv.com/captain-miller-conducts-the-collection-hunt/
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும் என தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் 3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர். 51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.