நடிகர் பாபி டியோலின் பிறந்தநாளையொட்டி, ‘கங்குவா’ படத்தில் அவர் நடித்துள்ள ‘உதிரன்’ கதாபாத்திர போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தனது 42ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கங்குவா என என பெயர் வைக்கபட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க்கும் இந்தப்படத்தின் டைட்டில் கடந்த ஏப்ரல் மாதம் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், பிஜூ தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்புக்கள் நடைபெற்றது. தற்போது இதனை படப்படிப்புக்கள் முற்றிலும் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் சூர்யாவிற்கு முதல் முறையாக ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை திஷா பதானி. இவர்களுடன் நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டப் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியானது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த வீடியோவை வெளியிட்டது.
இதன் பின்னர் சூர்யா குதிரையில் வருவது போல காட்சி கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசானது.
இந்த நிலையில் ‘கங்குவா’ படத்தில் பாபி தியோல் நடித்துள்ள ‘உதிரன்’ கதாபாத்திர போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கங்குவா படத்தில் ‘உதிரன் ’கதாபாத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படத்தைத் தயாரிக்கும் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தது.
அதன்படி இன்று நடிகர் பாபி டியோலின் பிறந்த நாளையொட்டி, ‘உதிரன்’ கதாபாத்திர போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாபி தியோல் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அண்மையில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் பாபி தியோல், வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த்திருந்தார். இந்த நிலையில் கங்குவா படத்தில் ‘உதிரன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : tharangambadi கடலில் மூழ்கி 2 பேர் பலி!
ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம் உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.
https://x.com/StudioGreen2/status/1751115316493758482?s=20
ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு மத்தியில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.