ஜிப்மரில் (jipmar) 15 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஜிப்மர் (jipmar) மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குருதிக்கொடை பாசறை செயலாளர் அமுதன் பாலா ,வேலவன் ஆகியோர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில தொழிற்சங்க தலைவர் அன்பு தென்னரசு, மாநில குருதி கொடை பாசறை செயலாளர் அரிமா நாதன், கடலூர் மாவட்ட செயலாளர் சாமி ரவி, விழுப்புரம் மாவட்ட மகளிர் பாசறை விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு, ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தில் மற்றும் அரசு பணியில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.