தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். அதில், நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை, நாகை, நெல்லை அரியலூர், கோவை உள்ளிட்ட 27 மாவட்டங்கள், உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்கள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்கள் என நாடு முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கியுள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, கல்லூரி- மக்கள் தொகை விகிதம், மொத்த கல்வி விகிதம், மாணவர் சேர்க்கை விகிதம், உள்ளிட்ட அளவுகோள்கள் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்