தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தொழில் துறையினருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை செய்கிறார். இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளிடமும் கருத்துக்கேட்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனையொட்டி பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த நிதியமைச்சர் நடத்த பழனிவேல் தியாகராஜன் முடிவுசெய்திருந்தார்.
அதனையொட்டி , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்புகளின் நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துக் கேட்கவிருக்கிறார் . இந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் ஆலோசனை செய்யவிருக்கிறார்.
தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த சந்திப்பு , காலை 11:30 மணிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பிற்பகல் 2:30 மணிக்கு வர்த்தக சங்க நிர்வாகிகளிடமும் கருத்துக்கேட்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.