சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி-யின் உடல் இன்று மாலை அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, உதவியாளர் கோபிநாத்துடன் தனது அடுத்த திரைப்படத்திற்கான லொகோஷன் பார்ப்பதற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
கடந்த 4 ஆம் தேதி ஒரு வாடகைக் காரில் இருவரும் சிம்லா சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டினரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது.
இதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், வெற்றி துரைசாமி (vetri ) குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணியில் தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முதலில் அவரது உடைமைகள், செல்போன் மீட்கப்பட்ட நிலையில், 8வது நாளான நேற்று 6 கிலோ மீட்டர் தொலைவில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் வெற்றியின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பபட்டு இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை தியாகராய நகர் மயான பூமியில் தகனம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க : director manikandan: ஐயா மன்னிச்சுடுங்க! வீட்டு வாசலில் பதக்கத்தை தொங்க விட்டுச் சென்ற திருடன்!
இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் வெற்றி துரைசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
https://x.com/ITamilTVNews/status/1757290564632854663?s=20
மேலும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தரவுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.