வெற்றி துரைசாமி-யின் தந்தை உருக்கம்!
சென்னைக்கு 48ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அரசியல் பணியோடு தொடர்ந்து மக்கள் நலப் பணிகளையும் மேற்கொண்டு வந்த சைதை துரைசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
மனிதநேயம் ஐஏஎஸ் அகாதமி என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், இந்த அகாதமியில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறார்.
இவரது பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட எழுத்து தேர்வுகளுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சைதை துரைசாமியின் ஒரே மகன் தான் வெற்றி துரைசாமி. இவர் “என்றாவது ஒரு நாள்” என்ற படத்தை இயக்கி இருந்தார்.
விதார்த், ரம்யா நம்பீசன் நடித்துள்ள அந்த திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 43 விருதுகளை குவித்துள்ளது
இயக்குநராக மட்டுமில்லாமல் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தான் இமாசல பிரதேசத்திற்கு சென்ற வெற்றி துரைசாமி, கார் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் சட்லஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
அவரது உடல் இமாசலபிரதேசத்தில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : Murasoli Editorial | ஆளுநர் திருந்தவே மாட்டாரா? கடுமையாக விமர்சித்த முரசொலி!
வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு உருக்கமாகப் பேட்டி அளித்த சைதை துரைசாமி,
“வெற்றி துரைசாமியை இமாச்சல பிரதேசத்துக்கு நான் போக வேண்டாம் என கூறினேன். ஆனால் இதுவே கடைசி முறை என்றார். ஆனால் இதுவே கடைசி பயணமாக அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1000 கணக்கான மாணவர்கள் அரசு உதவி பணிகளில் பணிபுரிகின்ற வாய்ப்பை பெற்ற அனைத்து மகன் மகன்களும் வந்துள்ளார்கள்.
https://x.com/ITamilTVNews/status/1757627692009116026?s=20
ஒரு மகன் போனாலும் எனக்கு பக்க பலமாக மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள். என்ற மன வலிமையோடு நான் இருக்கிறேன் என உருக்கமாகப் பேசினார்.
பல ஆயிரம் மாணவர்களுக்கு கல்வியை கொடுத்த சைதை துரைசாமி, தனது ஒரே மகனை இழந்து மனமுடைந்து நின்ற காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.