Hit and Run வழக்குகளுக்கு சிறை தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய பாரதிய நியாய சங்ஹிதா சட்டப்படி, சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்லும் (Hit and Run) வழக்கில், சிறை தண்டனை 2 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள லாரி ஓட்டுநர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலவரையற்ற போராட்டத்தில் குவித்துள்ளனர் .
நவி மும்பை பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில் போக்குவரத்தை சீர் செய்ய வந்த காவலரையும் , லாரி ஓட்டுநர்கள் விரட்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .