தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய ( prisoners pass ) இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது,
மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்;
EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!
சிறைவாசிகள் 260 பேர் தேர்வு எழுதியதில் 228 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 87.69% சிறைவாசிகள் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி ( prisoners pass ) பெற்றுள்ளன; மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன
பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:
தமிழ் – 8
ஆங்கிலம் – 415
கணிதம் – 20,691
அறிவியல் – 5,104
சமூக அறிவியல் – 4,428
பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்
- தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் – 96.85%
- ஆங்கிலம் – 99.15%
- கணிதம் – 96.78%
- அறிவியல் – 96.72%
- சமூக அறிவியல் – 95.74