சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் வழித்தடம் 3ல் ‘சிறுவாணி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வந்தடைந்தது. இதனை மெட்ரோ ரயில் நிர்வாகப் பணியாளர்கள், அலுவலர்கள் பலரும் மலர் தூவி வரவேற்றனர்.
சேத்துப்பட்டு நிலையத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 9ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது இந்த ‘சிறுவாணி’ இயந்திரம். 703 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப் பாதை பணியை இன்று வெற்றிகரமாக முடித்துள்ளது.
Also Read : வங்கதேச – இந்திய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு..!!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் எந்த வித தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் நினைத்ததை விட விரைவாகவே இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இனி வருவது மழைக்காலம் என்பதால் அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் மழையின்போது இந்த பணிகளை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.