12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறவுள்ள உள்ள நிலையில் (Hall Ticket) இன்று முதல் அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது
பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டிருந்தார்.
அதன்படி 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது.
மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 10-ல் வெளியிடப்படும்.
11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைகிறது.
பொதுத்தேர்வு 2024 மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி நிறைவு பெறும். மே 14-ந் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.
மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 22-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். மே 6-ம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (Hall Ticket) ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
Also Read : https://itamiltv.com/negotiation-failed-farmers-protest-continue/
மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அவரவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் தங்களது ஹால் டிக்கெட்டை தவறாமல் பெற்று கொண்டு தேர்வுக்கு (Hall Ticket) படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.