விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று வழங்கப்பட்ட சத்துமாவு கஞ்சி குடித்த 13 குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையத்தில் சத்து மாவு கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வழங்கப்பட்ட சத்துமாவு கஞ்சி குடித்த 13 குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் அடந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை குடித்த 13 குழந்தைகள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் அடைந்தனர்.
இதனை அடுத்து உடனடியாக 13 குழந்தைகள் உட்பட 29 பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதற்கிடையே சத்துமாவுக் கஞ்சியல் பல்லி விழுந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்துமாவு கஞ்சி குடித்து 29 பேர் மயக்கம் அடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று வழங்கப்பட்ட சத்துமாவு கஞ்சி குடித்த 13 குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. pic.twitter.com/FeybSux9s7
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) May 28, 2022