புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ( Pudukottai Jallikattu) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாவது சுற்றில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் பிரதானமானது ஜல்லிக்கட்டு போட்டி. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ‘ஏறு தழுவல்’ என்றும் அழைப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தைப்பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். இது தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.
https://x.com/ITamilTVNews/status/1743522420559057371?s=20
அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களில் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள விளையாட்டாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மதுரையின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்
தைப்பொங்கல் நெருங்க நெருங்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் வாடிவாசலில் இறங்கும் நாளை எதிர்நோக்கி தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ( Pudukottai Jallikattu) தொடங்கியது. இதற்காக அதிகாலை முதலே காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து வரிசைப்படுத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 297 மாடுபிடி வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/the-first-jallikattu-of-the-year-began-with-intense-preparations-at-thachankurichi/
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் 2-ஆவது சுற்றில் 160 மாடுகள் அவிழ்க்கப்பட்டன. 2-வது சுற்றுகள் முடிவின் அடிப்படையில் இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பார்வையாளர் சேவியர் (50) என்பவரை மாடு முதுகில் குத்தியதில் படுகாயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், 3-வது சுற்றில் 50 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டப்பட்டுள்ளனர்.