திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே, கூட்டு பாலியல் அச்சுறுத்தலினால் 17வயது சிறுமி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ம் தேதி தனது ஊரில் உள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு இங்கு நடந்ததை வெளியில் சொன்னால், இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன அந்த சிறுமி, வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார்.
பெற்றோரிரம் நடந்ததை சொல்லவும் முடியாமல், என்ன செய்வதென்று தெரியாத அச்சிறுமி, பயத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொண்டார்.
சிறுமி தீயிட்டு கொளுத்தி கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக சிறுமியை மீட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது