பல உயிர்களை காவுவாங்கிய சுனாமி கோரதாண்டவத்தின் 19 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆழி பேரலை என்று சொல்லப்படும் சுனாமி கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பல லட்சம் மக்களை காவு வாங்கியது . இந்தோனேசியாவின் சுபத்ரா பகுதியில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இந்தியா, இந்தோனேசியா ,இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி பேரலை உருவானது .
யாரும் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் ஏற்பட்ட இந்த ஆழி பேரலையில் சிக்கி 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2,29,866 பேர் மாண்டு போனார்கள்; 43,786 பேர் காணாமல் போயினர்.பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்தனர்.
இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்து பார்த்தல் நேசம் பதைபதைக்கிறது .
இந்நிலையில் இன்று சுனாமி கோரதாண்டவத்தின் 19ஆம் ஆண்டு நினைவுதினத்தில் கடலோரப் பகுதியில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. பொதுமக்கள் பால் ஊற்றி , மலர் தூவி தங்களது அஞ்சலியை மனமுருகி செலுத்தினர்.