தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்று மாலை காரில் சென்றுகொண்டிருந்த போது அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் சித்திக் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர் .
எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டில் சித்திக்கின் வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் பலத்த காயமடைந்த பாபா சித்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாநிலம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் சம்மந்தப்பட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
துப்பாக்கிச்சூட்டில் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் பிடிபடுவார்கள் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.