உ.பி-யில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு (kanpur) உள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உ.பி மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் இயற்கை உபாதையை கழிக்க, வயல் வெளிக்குச் சென்ற இரு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, அங்குள்ள மரத்தில் சடலமாக தொங்கியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
மரத்தில் சடலமாக தொங்கிய சிறுமிகளின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று ஒரு சிறுமியின் தந்தை வீட்டின் அருகே சடலமாக மீட்டெடுக்கப்பட்டார் . இந்நிலையில் சிறுமிகள் கொலை வழக்கில் செங்கல் சூளை உரிமையாளர் ராம்ரூப் நிஷாத் (48) அவரின் மகன் ராஜு (18), உறவினர் சஞ்சய் (19) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூளையில்தான் 2 சிறுமிகள், அவரது (kanpur) பெற்றோர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர் குடும்ப வறுமை காரணமாக வேலை பார்த்து வந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.