+2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று ( +2 marks ) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கைப்பட்ட 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் .
தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .
இதையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியானது . தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்தனர்
Also Read : சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு – காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்..!!
இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது .
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.inஇல் இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்துகொள்ளல்லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை ( +2 marks ) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.