காஞ்சிபுரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நேற்று பிரபா என்ற ரவுடி மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார் . இந்நிலையில் இந்தவழக்கில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை கைது செய்ய முயன்றபோது,சுதாரித்துக்கொண்ட அவர்கள் போலீசாரை அருவாளால் தாக்கி உள்ளனர் . இதையடுத்து வேறு வழியின்றி தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரன்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த சிறப்புக் காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகளான ரகு மீது ஒரு கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும், அசேன் என்ற கருப்பு அசேன் மீது 4 வழக்குகளும் உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.