பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களிடம் இருந்து 28- ஆம் தேதிக்கு பிறகு எக்காரணத்திற்காகவும் வாங்கக்கூடாது என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மத்திய அரசால் புழக்கத்தில் விடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால், இவை செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது .
இதையடுத்து பலரும் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி வேறு பணத்தை மாற்றி வந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த வாரத்தில் வரும் 26, 27, 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும்.
இதனை கருதி கொண்டு வரும் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .