தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ( vivekananda mandapam ) 3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருக்கும் கன்னியாகுமரில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது .
அவர் தவம் புரிந்த அந்த இடத்தில் 2 செப்டம்பர் 1970 ஆம் ஆண்டு அரசால் அங்கு விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டது.
கடலில் அமைந்திருக்கும் இந்த மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் கீழே ஒரு தியான மண்டபமும் அம்மைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் கடந்த ஜூன் 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதாக தமிழ்நாடு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்த விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் செய்திருந்தார் . ( vivekananda mandapam ) இந்நிலையில் பிரதமரின் பயணத்தை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றலா பயணிகள் அதிகம் வருவதாகவும் கூறப்படுகிறது.