உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் நடிகை சிவாங்கி ஜோஷி, ஹிந்தி திரைஉலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில், அவருக்கு சிறுநீரக தொற்று (kidney infection) பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல நடிகை 24 வயதில் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை.. நலமுடன் இருப்பதாக தகவல்..
சிவாங்கி ஜோஷி, ஹிந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சிவாங்கி அவரது, இன்ஸ்டாகிராம் பதிவில்,
“அனைவருக்கும் வணக்கம், கடந்த சில நாட்களாக, எனக்கு சிறுநீரக தொற்று (kidney infection) ஏற்பட்டது. ஆனால், எனது குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கடவுளின் அருளால் நான் நலமாக இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்”..
“நீங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவைக் கவனித்துக்கொள்வதையும், மிக முக்கியமாக உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் நேசிக்கிறேன். நான் விரைவில் குணமடைந்து மீண்டும் செயல்படுவேன்” என தெரிவித்துள்ளார்.