இந்த முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கொரோனா வைரஸில் இருந்து பத்துகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் கை கொடுத்துள்ளதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணி கடந்த வருடம் ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது… முதலில் 18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த மெகா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை 25 தடுப்பூசி முகாங்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று 26-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் இந்த முகாமில் 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி சசெலுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இன்று நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் இன்றைய தினம் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.