உத்தரப்பிரதேசத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவரை பள்ளி நிர்வாகமே நரபலி கொடுத்து கொடூர கொலை செய்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் DL பப்ளிக் பள்ளி வளர்ச்சி அடையவும், புகழ் பெறவும் வேண்டி 2ம் வகுப்பு மாணவரை விடுதியில் வைத்து பள்ளி நிர்வாகம் நரபலி கொடுத்துள்ளதாக அப்பகுதி போலீசார் அதிர்ச்சித் தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிய உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகல், அவரது தந்தை ஜஷோதன் சிங், ஆசிரியர்கள் லக்ஷ்மன் சிங், வீர்பால் சிங், ராம்பிரகாஷ் சோலங்கி ஆகிய 5 பேரை கைது செத்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி மற்றொரு சிறுவனையும் இவர்கள் நரபலி கொடுக்க முயன்றுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி பருவத்தில் குழந்தைகள் பெற்றோர்களுடன் இருப்பதை தாண்டி பள்ளியில் ஆசிரியர்களுடன் அதிக நேரம் இருக்கின்றனர் . இதில் பள்ளியிலேயே இப்படி ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.