மருதுபாண்டியர் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், தங்கும் விடுதியுடன் கூடிய பார்கள், படை வீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் உள்ளிட்டவை வரும் 27-ந்தேதியான இன்று, 29-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
“27.10.2023 சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், 29.10.2023 மற்றும் 30.10.2023 ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.