பாஜக நிர்வாகிகள் சுமார் 40 லட்சம் சுருட்டியுள்ளதாக திருமங்கலத்தில் உள்ள முக்கிய இடங்களில் (poster) ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை: திருமங்கலம் தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ₹40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக கூறப்படு புகாரை முன்வைத்து, திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிச்குமார், செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்ட நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுசேரில் கடந்த 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் தங்களது கட்சிகளுக்கு வாக்களிக்க கட்சி நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்துவாக வந்த புகாரின் பேரில் பலர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த போஸ்டரில் இருக்கும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக நிர்வாகிகள் சுமார் 40 லட்சம் சுருட்டியுள்ளதாக திருமங்கலத்தில் உள்ள முக்கிய ( poster ) இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது தமிழகம் முழுவதும் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.