உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புக்குழு நேற்று இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர் .
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் பணியில் இருந்த 41 சுரங்க தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி வெளியில் வரமுடியாமல் மாட்டிக்கொண்டனர். திட்டத்தட்ட 17 நாட்கள் உள்ளேயே சிக்கி தவித்த 17 சுரங்க தொழிலாளர்களுக்கு உணவு ஆக்சிசன் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சுரங்கத்தில் துளையிட்டு தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு இரவு பகல் பார்க்காமல் உழைத்தது .
இதையடுத்து நேற்று இரவு சுரங்கத்தில் சிக்கிய தொழிலார்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.சுரங்கத்தில் இருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் நேரடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவர்களுக்கு அடிப்படையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளுக்குப் பின்னரே, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இந்த விடாமுயற்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.