திருமணத்திற்கு புத்தாடை வாங்கி கொண்டு வந்தபோது கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ( 5 people died in a road accident ) 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள ராணிநகரை சேர்ந்த ஷேக் சுரோஜ் பாஷாவிற்கு இந்த மாதம் 27 ம் தேதி திருமணம் நடக்கிறது. இதற்காக திருமண ஆடைகள் வாங்க குடும்பத்தினர் 7 பேருடன் ஐதராபாத் சென்றுள்ளனர் .
இதையடுத்து பிடித்த புத்தாடைகளை வாங்கிய திருப்தியுடன் மீண்டும் அனந்தபுருக்கு காரில் வந்து கொண்டுருந்தனர்.
இந்நிலையில் ஷேக் சுரோஜ் பாஷா கார் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டுருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.
Also Read : கனமழை எச்சரிக்கை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்திய தமிழக அரசு..!!
அப்போது அந்த பக்கம் அனந்தபுரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற லாரி கார் மீது மோதியுள்ளது . இந்த கோர விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் குத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கார் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் சந்தேகப்படும் நிலையில் . இந்த விபத்தில் அல்லி சாஹேப் (58), ஷேக் சுரோஜ்பாஷா (28), முகமது அயன் (6), அமன் (4), ரெஹானா பேகம் (40) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு புத்தாடை வாங்கி கொண்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் ( 5 people died in a road accident ) பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .