காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் வழக்கம் போல் இந்திய ராணுவ ரோந்து வாகனங்கள் வலம் வந்துள்ளது அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ ரோந்து வாகனங்கள் கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது . நீண்ட நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!!
இதையடுத்து இச்செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறி, உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதால் அங்கு மேலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.