ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தான் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 24க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டில் முக்கிய ரவுடிகள் ஸ்கெட்டுச் போட்டு நடத்திய இந்த படுகொலையில் ஏரளாமான வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .
Also Read : மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்தில் பெயர், குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு 25 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . சம்போ செந்தில், அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகிய 2 பேர் மட்டும் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.