தமிழக அரசால் ரூ.152.67 கோடி மதிப்பிலான (52 new projects) 52 புதிய திட்டங்களுக்கு இன்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
விழாவை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
தி.மு.க ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் சிங்காரச் சென்னை, சிங்காரச் சென்னை 2.o என சென்னையின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழை பாதிப்பில் இருந்து சென்னை மீள 10 நாட்களான நிலையில், கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இரண்டே நாட்களில் சென்னை மீண்டு வந்துள்ளது.
இன்றைய நாளில் சென்னை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை என்ற அளவுக்கு சென்னை மாநகராட்சி முன்னேறி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி, தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கான பல வளர்ச்சி திட்டங்களை முதல்வர் கவனத்துடன் செய்து வருகிறார்.
உலக அளவில் சென்னை மாநகராட்சி இன்னும் பல உயரங்களைத் தொடுகிற வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில்
நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைக்க பட்டுள்ளது .
இதுமட்டுமின்றி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழாக மக்களுக்காகவும் இன்னும் பல நல்ல திட்டங்களை கொண்டுவர உள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்ய தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் .
இதற்காக தான் நமது முதல்வரும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டின் அருமைகளை எடுத்துக்கூறி வருகிறார்.
Also Read : https://itamiltv.com/premalatha-tattoo-the-image-of-the-captain-vijayakanth/
(52 new projects) ஸ்பெயின் நாட்டில் முதலவரின் தலைமையில் பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான தொழில் முதலீடுகளை
பல ஸ்பானிஷ் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.