பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனான பட்ஜெட்டு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார் .
கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள் :
2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்ட டிமாண்ட் நோட்டீஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
ஜிஎஸ்டி தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு செலுத்த வேண்டிய முன் வைப்புத் தொகையின் அளவைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மூன்று மாத காலம் அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தொடங்கும் என்ற சிஜிஎஸ்டி சட்டத்தின் விதிகளை திருத்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
வரி செலுத்துவோரின் வட்டிச் சுமையைக் குறைக்க, மின்னணு பணப் பேரேட்டில் (ECL) கிடைக்கும் தொகைக்கு, வருமான வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 50-ன் கீழ் வட்டி விதிக்க வேண்டாம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
Also Read : 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!
பால் கேன்களுக்கு (எஃகு, இரும்பு, அலுமினியம்) 12% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
சாமானிய மக்களுக்கு ரயில்வே வழங்கும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
விடுதி சேவைகள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான சில விலக்குகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
அனைத்து சூரிய சமையல் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளுக்கான குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான ஐஜிஎஸ்டி வரி விலக்கை 2029 ஜூன் 30 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.