திண்டுக்கல்லில் ரிமோட் கன்ட்ரோல் காரில் இருந்த LED லைட்டை விழுங்கிய 6 மாத குழந்தையை அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தை வீட்டில் இருந்த ரிமோட் கன்ட்ரோல் காரில் இருந்த LED லைட்டை விழுங்கியுள்ளது .
இதையடுத்து அந்த குழந்தை தொடர்ந்து அழ தொடங்கியதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்களை குழந்தையின் நுரையீரலில் LED லைட் சிக்கிருப்பதை கண்டறிந்தனர் .
Also Read : ComeBack கொடுத்துள்ள செந்தில் பாலாஜி – கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
இதையடுத்து குழந்தையின் நுரையீரலில் சிக்கியிருந்த LED லைட்டை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
பிராங்கோஸ்கோப்பி என்ற நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ள இந்த LED லைட் ரிமோட் கன்ட்ரோல் காருடையது என தெரிய வந்தநிலையில் குழந்தைகளின் அருகில் சிறு பொருட்களை வைப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள் எப்போதும் கவனமுடன் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.