வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ₹64,920 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் இந்திய திருநாட்டில் ஏற்கனவே பொருளாதாரத்தின் நிலை சற்று மோசமாக யிருக்கும் நிலையில் லஞ்சம் , கருப்பு பணம் வருமா வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தற்போது நாடு முழுவதும் தலைவிரித்து ஆடி வருகிறது.
இதில் கோடிகளில் புரளும் பண முதலைகள் தங்களின் தேவைக்காக பல ஆயிரம் கோடிகளை வங்கிகளில் இருந்து கடனாக பெற்று கொண்டு அதன் திருப்பி செலுத்தாமல் எங்கோ வெளிநாட்டில் பதுங்கி உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது.
அதேசமயம் இந்த பக்கம் நம் பசிக்கு சோறு போட நினைக்கும் விவசாயிகள் பயிரிடுவதற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை என்ற முடிவை நோக்கி இறுதியாக செல்கின்றனர்.இதனை தடுக்கவும் நடவடிக்கை நடுக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைள் எடுத்தாலும் பலன் இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறியே.
இந்நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
2023 ஆம் ஆண்டு பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை சுமார் 14,159 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 1,105 வங்கிக் கடன் மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இதனை பேரில் வெறும் 150 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை சுமார் 64,920 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.