தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் கொலை சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை விட குறைவாக உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் முந்தைய ஆண்டை விட 7% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கடந்த 2019-ம் ஆண்டில் 1,745 கொலை வழக்கள் பதிவாகி இருந்தத நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வரும் போக்கு காணப்படுகிறது.
Also Read : கோலாகலமாக நடைபெற்ற அகரம் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா..!!
2023-ம் ஆண்டில் 1,598 கொலை வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2024-ம் ஆண்டில் 1,489-ஆகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளே கொலைக் குற்றங்கள் குறைந்து வருவதற்கான காரணம் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .