மக்களவை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் (Flying Forces) 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிப்புகளை புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜீவ்குமார் நேற்று மாலை வெளியிட்டார்.
அதன்படி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் உள்ளனர்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்கள் படங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் விதிமுறை அமலில் வந்துள்ளதால் தமிழகத்தில் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடைபெறும்.
தமிழகம் முழுவதும் 3 ஷிப்ட் அடிப்படையில் 702 நிலையான கண்காணிப்பு (Flying Forces) குழுவினரும் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர்.