மதுரை மாவட்டத்தில் 8833 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மதியம் நடை பெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 8,833மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 225 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக மதுரை மாவட்டத்தில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது,
அதன்படி, தேர்வு மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் சென்றுவிட வேண்டும் என்றும் ஆடை கட்டுப்பாடு உட்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் இந்த முறை பயோமெட்ரிக் மூலம் மாணவ மாணவிகளின் வருகையை பதிவேடு செய்தனர். மேலும் அனைத்து தேர்வு அறையிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 1500 மாணவர்கள் குறைவாக தேர்வு எழுதுகின்றனர்.