சென்னையில் சட்டவிரோதமாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது.
வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், மனைவி நாசியா, அவர்களது நண்பர் லோகேஷ் உள்ளிட 6 பேர் சிறுமியை சுமார் 6 மாதங்களுக்கு மேலாக துன்புறுத்தி வந்ததாகவும்.
Also Read : திருச்செந்தூரில், நாளை யாக சாலை பூஜையுடன் தொடங்கும் கந்த சஷ்டி விழா..!!
சிறுமியின் உடலில் ஆங்காங்கே சிகரெட்டினால் சூடு வைத்த காயங்கள், கொடூரமாக தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள் இந்த அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.