Rubymar : யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய கோர தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த சரக்குக் கப்பல் ஒன்று கடலுக்குள் மூழ்கி உள்ளது .
செங்கடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ‘ரூபிமா் ’ என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல் காரணமாக கடுமையாக சேதமடைந்திருந்தது .
இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் இருந்த எண்ணெய் வெளியேறி, தற்போது செங்கடல் பகுதியில் சுமாா் 29 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய்ப் படலம் பரவி உள்ளது.
கப்பலின் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கி வந்த ரூபிமா் சரக்கு கப்பல் இன்று முழுமையாக கடலுக்குள் முழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/drug-trafficking-aiadmk-protest-today-against-tngovt/
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட ரூபிமா் கப்பலை லெபானைச் சோ்ந்த நிறுவனமொன்று இயக்கி வந்தது.
இஸ்ரேலுக்கும் – ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியின் கடல்வழி போக்குவரத்து (Rubymar) கடுமையாக பாதிக்கப்படுவதுடன் உயிர்க்குக்கு ஆபத்தான சூழ்நிலையும் உருவாகி உள்ளது.