ஹரியானாவில் இதயத்தில் குத்திய கத்தியை எடுக்க சிக்கலான அறுவை சிகிச்சை செய்து உயிரை கைப்பற்றிய மருத்துவர்களுக்கு தற்போது பாராட்டுககள் குவிந்து வருகிறது.
ஹரியானாவில் சண்டையின்போது தினேஷ் என்பவரின் இதயத்தில் கைதி குத்தியுள்ளது . கத்தியின் பிடி உடைந்ததால் முழுமையாக இதயத்துக்குள் குத்தி இருந்துள்ளது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் தினேஷின் நிலையை கண்ட மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர் .
Also Read : குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது..!!
சுமார் 4 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் மருத்துவர்கள் தடுத்துள்ளனர் . இதையடுத்து தற்போது தினேஷ் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதயத்தில் குத்திய கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.