மத்திய கிழக்கு வங்கக் கடல்,வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்துவாங்கி வரும் நிலையில்
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை உருவாகி உள்ளது.
Also Read : இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்..!!
இது மேற்கு-வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து . மத்திய கிழக்கு வங்க கடலில், நாளை மறுநாள் புயலாக வலுவடைய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
அப்படி உருவாகும் இந்த புயலுக்கு கத்தார் நாடு அறிவுறுத்திய “டானா” புயல் என பெயர் வைக்கப்பட உள்ளது.