மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளியில் தனது மகனை விட்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பிய போது லாரி சக்கத்தில் சிக்கி பெண் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோழம்பேட்டை மெயின் ரோட்டுக்கு அருகில் வசித்துவரும் முத்து என்பவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது ஒரே மகன் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். ராஜேஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் ராஜேஸ்வரி தினமும் ஸ்கூட்டியில் தனது மகனை அழைத்துச் சென்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
அந்த வகையில் வழக்கம் போல் தனது மகனை பள்ளியில் விட்ட ராஜேஸ்வரி வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த லாரி ராஜேஸ்வரியின் ஸ்கூட்டிமோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரியின் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.