வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் .
Also Read : அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது..!!!
இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 7 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் வடகிழக்குப் பருவமழை நவ. 12ம் தேதி முதல் சூடுபிடிக்கும் எனவும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .