கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசிகள் உள்ளிட்டிட்ட பல கட்டுப்பாடுகளுக்கு பின்னர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.
இன்னும் சில நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கபட்டு வருகின்றனர். இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய ஆப்பிரிக்காவில் கொடிய வகை வைரஸ் ஒன்று திடீரென பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் பற்றி தெரிந்ததும் அதுபற்றி அந்நாடு உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்து உள்ளது.
எபோலோ போன்ற இந்த கொடிய வைரசுக்கு மார்பர்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 9 பேர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வைரசானது, எபோலா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அதே குடும்ப வகையை சேர்ந்தது. அதிக பரவும் தன்மை கொண்ட, 88 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுத்த கூடியது என்று கூறப்பட்டுள்ளது
இதனை அடுத்து மார்பர்க் என்னும் இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதித்த மாவட்டங்களில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அறிகுறிகளுடன் கூடியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ சிகிச்சை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.