விருத்தாச்சலம் அருகே ரயிலில் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த கர்ப்பிணி பெண் ( pregnant woman ) உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் சென்னையில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயிலில் பயணம் செய்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணுடன் வந்த உறவினர்கள் அபாய சங்கிலி செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ரயிலை நிறுத்த உறவினர்கள் போராடியபோதும் ரயில் நிற்காமல் சென்றுள்ளது. பின்னர் ரயில் 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி நடுவழியில் நின்றது. இதைத் தொடர்ந்து ரயிலில் இருந்து இறங்கிய அவரது உறவினர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பெண்ணை தேடியுள்ளனர் .
Also Read : நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள் – சாக்ஷி மாலிக் வேதனை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கரிப்பினியான கஸ்தூரியை தேடியபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கஸ்தூரியின் உடலை கண்டு கதறி அழுத்த உறவினர்கள் ரயிலில் அபாய சங்கிலி ஏன் வேலை செய்யவில்லை என கேள்வி எழுப்பி புகார் அளித்தனர்.
நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கர்ப்பிணி பெண் கஸ்தூரி ( pregnant woman ) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.