சென்னை ஐஐடி ஸ்டார்ப் அப் நிறுவனமான அக்னிகூல் நிறுவனம் வடிவமைத்த ‘அக்னிபான்’ ராக்கெட் ( AgnibaanSoRTed ) வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஸ்டார்ப் அப் நிறுவனமான அக்னிகூல் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ராக்கெட்டை தயாரித்து வந்தது.
இந்நிலையில் இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ இஸ்ரோவை நாடியது அக்னிகூல் நிறுவனம்.
எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க கடைசியில் ஒரு சில காரணங்களால் ஏற்கெனவே இரண்டு முறை விண்ணில் செலுத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது .
இந்நிலையில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் என்ற Startup நிறுவனத்தின் அக்னிபான் SorTed என்ற ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .
இந்த தகவலை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து தனியாரால் அனுப்பப்பட்ட ( AgnibaanSoRTed ) இரண்டாவது ராக்கெட் எனும் பெருமையை அக்னிபான் ராக்கெட் பெற்றுள்ளது.