சென்னையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட கோரவிபத்தில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது.
சிரயவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் வெடித்த பட்டாசுகளின் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று இரவு முதல் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் பாட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த, தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
விபத்தை ஏற்படுத்த அந்த காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடி விட பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் தீவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மின்னல் வேகத்தில் வந்த கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதியது மட்டுமல்லாமல் , அங்கிருந்தவர்கள் மீதும் மோதியுள்ளதாகவும் மது போதையில் காரை இயக்கியதே இந்த கோர விபத்திற்குக் காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.