விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
Also Read : 2025 ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா புதிய தகவல்..!!
தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்பான சோதனையின் ஒரு பகுதியாக அவரது மருமகனான ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதால் சோதனையின் முடிவில் இதுகுறித்து விரிவான விளக்கம் கொடுக்கப்படும் என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.