ஆவின் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் இந்த ஆவின் மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆவின் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதன்படி, பன்னீர் ஒரு கிலோ ரூ.450இல் இருந்து ரூ.550 ஆகவும், அரை கிலோ விலை ரூ.250இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 200 கிராம் பன்னீர் விலை ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை ரூ.ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆவின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது